இந்நிலையில் நேற்று 11வது ரவுண்டு போட்டி நடந்தது. வெள்ளைக் காய்களுடன் குகேஷ் ஆட்டத்தை துவக்கினார். ஆட்டத்தின் 28வது நகர்த்தலின்போது ராணியை தவறான இடத்தில் நகர்த்தி லிரென் சிக்கலில் மாட்டினார். அந்த வாய்ப்பை குகேஷ் சரியாக பயன்படுத்தியதால், வேறு வழியின்றி லிரென் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, 6-5 என்ற புள்ளிக் கணக்கில் குகேஷ் முன்னிலை பெற்றார். இன்னும் 3 ரவுண்டுகளே மீதம் உள்ளதால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் வாய்ப்பு குகேசுக்கு அதிகரித்துள்ளது. இன்று 12வது ரவுண்டு போட்டி நடக்கவுள்ளது.
The post 11வது ரவுண்டில் குகேஷ் வெற்றி appeared first on Dinakaran.