ஒன்றிய அரசு நிவாரண நிதி கொடுக்காவிட்டால் காவி நிறம் பூசுவதில் எந்தவித தவறுமில்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: ஒன்றிய அரசு நிவாரண நிதி கொடுக்காவிட்டால் காவி நிறம் பூசுவதில் எந்தவித தவறுமில்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச் சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். உடனடி நிவாரண தொகையாக 2000 கோடி ரூபாய் தேவை என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.  இதுவரை ஒன்றிய அரசு எந்தவிதமான உதவியும் செய்யவில்லை. ஆனால் நேற்று கிடைத்த செய்தியில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வேண்டிய உதவிகள் செய்யும் என்று தகவல் வந்துள்ளது, பொறுத்திருந்து பார்ப்போம். ஒன்றிய அரசிடம் நிதி கேட்டு கொடுக்கவில்லை என்றால் அதற்கு காவி நிறம் பூசத்தானே வேண்டும், அதில் என்ன தவறு இருக்கின்றது.

ஒன்றிய அரசு நிறம் காவி தானே, ஒன்றிய அரசு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த கோயில்களில் முன்பெல்லாம் மஞ்சள் நிறம் அடித்தோம், தற்போது காவி நிறம் அடித்து வருகின்றனர். காவிமயமாக்குவது அவர்களது குறிக்கோளாக இருக்கிறதே தவிர மக்களை காப்பாற்ற வேண்டியது குறிக்கோளாக இல்லை. இந்தியை திணிக்காதீர்கள் என்பதுதான் எங்கள் நிலைப்பாடே தவிர யாரையும் இந்தி கற்கக் கூடாது என்று சொல்லவில்லை, யாரையும் தடுக்கவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஒன்றிய அரசு நிவாரண நிதி கொடுக்காவிட்டால் காவி நிறம் பூசுவதில் எந்தவித தவறுமில்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: