அப்போது ஆனந்தி, தமிழ்செல்வனிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினர். அப்போது தமிழ்செல்வன் திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த ஒரு பெண்ணையும் காதலித்து வந்துள்ளார். இதனால் ஆனந்தியை தமிழ்செல்வன் திருமணம் செய்யாமல் காலம் கடத்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆனந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனந்தி தற்கொலைக்கு தமிழ்செல்வன்தான் காரணம் என ஆனந்தியின் தந்தை மலைக்கனி, அவரது அண்ணன் ராஜாராம் (25) ஆகியோர் முடிவு செய்தனர். தனது மகளை காதலித்து விட்டு அவள் தற்கொலைக்கு காரணமான தமிழ்செல்வனை கொலை செய்ய திட்டமிட்டனர். இதற்காக மகளின் காதலன் எங்கே இருக்கிறார் என இருவரும் தேடி வந்தனர்.
அப்போது தமிழ்செல்வன் கோவை அடுத்த துடியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் டிரைவராக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. இதை அடுத்து நேற்று காலை தந்தை, மகன் 2 பேரும், ராஜபாளையத்தில் இருந்து பைக்கில் கோவை வந்தனர். மதியம் 12 மணி அளவில் துடியலூர் சென்றதும் தமிழ்செல்வனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினர். மறுமுனையில் பேசிய தமிழ்செல்வனிடம் எங்கு இருக்கிறாய் என கேட்டனர். அதற்கு அவர் மருத்துவமனையில் இருப்பதாக கூறினார். உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும், மருத்துவமனையை விட்டு வெளியே வரமுடியுமா என கேட்டனர். சரி வருகிறேன் என கூறிய தமிழ்செல்வன் வெளியே வந்தார். இதை அடுத்து அவரை மருத்துவமனையில் இருந்து சற்று தள்ளி ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு 2 பேரும் அழைத்து சென்றனர். அங்கு மகள் தற்கொலை குறித்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இருவரும் தமிழ்செல்வனை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் தமிழ்செல்வன் நிலை குலைந்து கீழே விழுந்தார். பின்னர் ஆட்டை அறுப்பது போல் அவரது கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு பைக்கில் இருவரும் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் தமிழ்செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மலைக்கனி, ராஜாராம் ஆகிய இருவரும் மருத்துவமனையில் இருந்து தமிழ்செல்வனை வெளியே அழைத்து செல்வதும், கொலை செய்து விட்டு இருவரும் பைக்கில் தப்பி செல்வதும் பதிவாகி இருந்தது.
மேலும் கொலை நடந்த இடத்தில் மலைக்கனி பட்டன் செல்போனை தவறி விட்டு விட்டு சென்று விட்டார். அதை கைப்பற்றிய போலீசார், அந்த போனில் ராஜாராம் எண் பதிவாகி இருந்தது. அந்த எண்ணை வைத்து போலீசார் ராஜாராம் செல்போனுக்கு அழைத்து பேசினர். அப்போது கொலையை ஒப்புக் கொண்ட அவர் தாராபுரம் செல்லும் வழியில் குண்டடம் அருகே பைக்கில் இருவரும் சென்று கொண்டிருப்பதாக கூறினார். இதையடுத்து தனிப்படை போலீசார் குண்டடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் தந்தை, மகன் இருவரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் துடியலூர் போலீசார் குண்டடம் சென்று தந்தை, மகன் ஆகிய இருவரையும் கைது செய்து துடியலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.
கைதான மலைக்கனி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: எனது மகள் ஆனந்தி பெங்களூரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நான் கேன்சர் வியாதியால் பாதிக்கப்பட்டு உள்ளேன். எனது மருத்துவ செலவுக்கு அவளது நகைகளை அடமானம் வைத்து எனக்கு பணம் கொடுத்து கவனித்து வந்தாள். மகள் மீது உயிரை வைத்திருந்தேன். மகள் தற்கொலைக்கு காரணம் தமிழ்செல்வன் என தெரிந்ததால் அவரை பழிதீர்க்க கொலை செய்தோம். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர்.
The post காதலித்து ஏமாற்றியதால் மகள் தற்கொலை; தனியார் மருத்துவமனை டிரைவரை கொலை செய்த தந்தை, மகன் கைது: பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.