சேலத்தில் கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்து மக்களிடம் பணமோசடி செய்த 5 பேர் கைது

 

சேலம்: சேலத்தில் கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்து மக்களிடம் பணமோசடி செய்த 5 பேரை கைது செய்தனர். சேலம் தனியார் மண்டபத்தில் மக்களைத் திரட்டி பணம் வசூலித்த 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அன்னை கஸ்தூரிபாய் பெயரில் தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள் நலன் மற்றும் சமூக மேம்பாட்டிற்காக குறிப்பாக சிவகங்கை போன்ற மாவட்டங்களில் மகளிர் மன்றங்கள் மற்றும் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை மகளிர் மேம்பாடுகல்வி மற்றும் சமூக நலப் பணிகளில் ஈடுபட்டுசமூக சேவை புரிந்து வருகின்றன. இந்நிலையில் வளம் குன்றா வளர்ச்சி சங்கம் என்ற பெயரில் பல்வேறு விதமான அறிவிப்புகளை அறிவித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் 5 கிலோ அரிசியும் சில மளிகை பொருட்களும் இலவசமாக பெற்று கொள்ளலாம். பயனாளிகள் குடும்பத்தில் உள்ள பெண் பிள்ளைகளின் பூப்புனித நீராட்டு விழாவிற்கு நிதி கொடுக்கப்படும். அதன் தொகை ரூ.5000 முதல் 35 வரை வழங்கப்படும். பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு கல்யாண சீர்வரிசையாக 225 பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். மக்கட்பேறு காலத்தில் பிரவசத்திற்கு ஆகும் செலவினங்கள் ஏற்று கொள்ளப்படும்.

பயனாளிகள் குடும்பத்தில் சொந்தமாக இடம் உள்ளவர்களுக்கு இளவடமாக 650 சதுர அடியில் வீடு கட்டித்தரப்படும். சுயதொழில் செய்ப்பவர்களுக்கு தொழில் உதவி கடனாக ரூ.10 லட்சம் வழங்கப்படும். இதர அத்தியாவசிய செலவுகளுக்கான பில்களை ஆடிட் செய்து ஜிஎஸ்டி வரியை திரும்ப மானியமாக வழங்கப்படும் என்று அறிவிப்புகள் வெளியிட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர். 15 ஆண்டுகளுக்கு தினமும் ரூ.10 செலுத்தினால் இறுதியில் ரூ.10 லட்சம் தருவதாக கூறி ஏராளமானோரிடம் பணம் வசூலித்துள்ளனர்.

ஹேப்பி ஹோம்ஸ் என்ற பெயரில் திட்டத்தில் சேர்ந்தால் அதிகளவு லாபம் கிடைக்கும் எனக்கூறி பணம் வசூல் செய்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த அருண்பால், செந்தில்குமார், சுரேஷ், கஜேந்திரன், வேதாச்சலம் ஆகியோர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடம் இருந்தும் ரூ.6 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பணம் வசூலித்த அன்னை கஸ்தூரிபாய் சமூக சேவை சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் கைது செய்தனர். சேலம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: