சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது

பெரம்பூர்: சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 46 வயது பெண்ணுக்கு திருமணமாகி 7 வயதில் பெண் குழந்தை உள்ளது. அவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் சிறுமி தனது வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி வீட்டிற்கு செல்லும்போது, அங்கிருந்த மர்மநபர் ஒருவர் சிறுமியை தனது வீட்டிற்குள் கையை பிடித்து இழுத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது சிறுமி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை மீட்டு அவரது தாயாரிடம் ஒப்படைத்தனர்.

அதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிமேகலை தலைமையிலான போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அயனாவரம் பகுதியைச் சேர்ந்த விஜய் (35) என்ற நபரை நேற்று அயனாவரம் கான்ஸ்டேபில் ரோடு பகுதியில் வைத்து விஜயை கைது செய்தனர். போலீசாரிடமிருந்து தப்பித்து ஓடும்போது விஜய் கீழே விழுந்ததில் அவருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: