ஐயப்பன் அறிவோம் 12: மகிஷியின் மகன்

மகிஷியை வதம் செய்ய முடிவு செய்கின்றனர். முதலாவதாக, பூர்வஜென்மத்தில் லீலாவதி சாபம் இட்டது போல, தத்தாத்ரேயரை மகிஷம் (எருமை) போன்று உருவாக்கும் நோக்கில் மீண்டும் உருவாக்கிறார்கள் மும்மூர்த்திகள். அதற்கு சுந்தர மகிஷம் என பெயரிட்டனர். ‘‘நீ சென்று தேவலோகத்தில் உள்ள உனது பூர்வஜென்ம மனைவி லீலாவதியான மகிஷியை கண்டு, ஏமாற்றி, பூலோகம் அழைத்துச் சென்று அவளின் விருப்பப்படி சில காலம் இல்லற வாழ்க்கை நடத்து. அப்படி செய்தால் உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும். சாபத்தால் உண்டான இந்த பிறவி தேவர்களின் நல்வாழ்விற்காக பயனுள்ளதாக அமையட்டும்’’ என ஆசிர்வதித்து அனுப்பி வைக்கின்றனர்.

அதன்படி சுந்தர மகிஷம், தேவலோக தலைநகரான அமராவதி நகரின், வீதியில் ஆரவாரத்துடன் உலாவி திரிகின்றான். யார் இது? அரக்கர் குலத்தில் அழகான ஆபரணங்களுடன் கூடிய அழகான ராஜகுமாரன் போன்று ஒருவன் இருக்கிறான் என மகிஷி நேரில் சென்று பார்க்கிறார். அப்போது முன்ஜென்ம விதிப்படி சுந்தர மகிஷனிடம், மகிஷி வசப்படுகிறார். பூர்வ ஜென்மத்தில் தொடரவேண்டிய இல்லற வாழ்வை தொடர எண்ணுகின்றனர்.

இதனை சாதகமாக பயன்படுத்தி, மகிஷியை தந்திரமாக பூலோகத்திற்கு அழைத்து வருகிறார் மகிஷனான தத்தாத்ரேயர். தேவலோகம், வரம், பலம் என அனைத்தையும் மறந்து மகிஷனுடன், மகிஷி மலைக்காடுகளில் இல்லற வாழ்க்கை தொடர்கிறார். இந்த இல்லற வாழ்வில் ஒரு மகனும் பிறக்கிறான். அதே மகிஷ முகத்துடன். அவன் பெயர் துந்துபி. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், தேவலோகத்தை ஆக்கிரமித்திருந்த அரக்கர்களுடன் போரிட்டு வென்றெடுத்து மீண்டும் தேவலோகத்தை தன் வசப்படுத்துகிறார்கள்.

அரக்கர்களும் பயந்து ஓடி மறைகிறார்கள். தேவர்களை வீழ்த்த அரக்கர் குல அரசி மகிஷியால் மட்டுமே முடியும் என எண்ணி தேடும் பணியில் ஈடுபட்டனர். பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் தயவால் மீண்டும் அரியணை ஏறிய இந்திரனுக்கு, மகிஷி போன்ற அரக்கர்கள் இல்லை. இனி எதிர்ப்பதற்கு ஆள் இல்லாததால், தானே உயர்ந்தவன் என்ற ஆணவம் ஏறியது. (நாளையும் தரிசிப்போம்)

* சபரிமலையில் நாளை
அதிகாலை
3.00 நடை திறப்பு
3.05 நிர்மால்ய தரிசனம்
3.15-11.30 நெய்யபிஷேகம்
3.25 கணபதி ஹோமம்
காலை
7.30 உஷ பூஜை
நண்பகல்
12.30 உச்சிகால பூஜை
1.00 நடை அடைப்பு
மாலை
3.00 நடை திறப்பு
6.30 தீபாராதனை
இரவு
7.00 புஷ்பாபிஷேகம்
10.30 இரவு பூஜை
10.50 அரிவராசனம்
11.00 நடை அடைப்பு

The post ஐயப்பன் அறிவோம் 12: மகிஷியின் மகன் appeared first on Dinakaran.

Related Stories: