ஐயப்பன் அறிவோம் 4: கன்னிசாமியின் கடமைகள்

கன்னிசாமியானவர் முதலில் தன் மனதையும், உடலையும் பக்குவப்படுத்திக்கொள்ள ஒரு மண்டல காலம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை பார்ப்போம். புண்ணிய தீர்த்தமாடி, முதலில் குருசாமிக்கு குருதட்சணை (முடிந்த காணிக்கை) வைத்து, சிவன் அம்சமான ருத்ராட்சம், பெருமாள் அம்சமான துளசி (மருத்துவ குணம் உடைய மாலைகள்) மாலை அணிந்து கொண்டவுடன், கருப்பு நிற ஆடையை அணிந்து கொள்ள வேண்டும்., கருப்பு சனீஸ்வரனுக்கு உகந்தது.

மற்றொன்று காட்டுவழிப் பாதையில் செல்லும்போது யானை போன்ற மிருகங்களின் பார்வைக்கு கருப்பு உடை படாது. அறிவியல் ரீதியில் பார்த்தால் வெப்பத்தை உள்வாங்கும் தன்மையுடையது என்பதால் குளிர்காலத்திற்கு உகந்தது. காலை, மாலை இருவேளையில் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் (கார்த்திகை, மார்கழி குளிர்காலம். மற்றொன்று பம்பை போன்ற கடும் குளிர் பகுதியில் நீராட உடலை தயார்படுத்துதல்). தலைமுடி வெட்டுதல், நகம் வெட்டுதல், முகம் சவரம் செய்து கொள்ளுதல், காலணி அணிதல், தங்கம் போன்ற ஆபரணங்கள், அணிகலன்கள் ஆடம்பரங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

சாதாரண விரிப்புகளை விரித்து தரையில் உறங்குதல், சைவ உணவுடன் கூடிய உணவு கட்டுப்பாடு, புகையிலை, போதை வஸ்துகளை தவிர்த்தல், இறப்பு (ரத்த உறவு விதிவிலக்கு) நிகழ்வு போன்றவற்றை தவிர்த்தல் போன்றவை உடலை பக்குவப்படுத்துகிறது. இதனை போன்று மனதை பக்குவப்படுத்துவதற்கு வீட்டில் காலை, மாலையில் நீராடியவுடன் பூஜை அறையில் ஒருமுக சிந்தனையுடன் 108 சரணங்களை கூறியும், அகத்திய முனிவர் வகுத்த ஸ்தோத்திரங்களுடன் வழிபாடு செய்தல், நாள்தோறும் செல்லமுடியாவிட்டாலும் புதன், சனிக்கிழமைகளில் ஐயப்பன் கோயில்களில் நடக்கின்ற பஜனை, கூட்டு பிரார்த்தனைகளில் கலந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக கோபம், காமம் உள்ளிட்டவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மனதையும், உடலையும் பக்குவப்படுத்தி ஒரு மண்டல காலமும் இறை சிந்தனையுடன் இருப்பதால் மனிதன் தெய்வமாகிறான். மேலும் மருத்துவ ரீதியில் உடலில் உள்ள ரத்த நாளங்களும், செல்களும் 45 நாட்களில் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்வதால் புது மனிதனாகிறான். இதனால் எப்பேற்பட்ட தீயபழக்கத்துக்கும் அடிமையானவர், ஒருமுறை சபரிமலை சென்று வந்தால் உடனடியாக விட முடியாவிட்டாலும் படிப்படியாக தீயபழக்க வழக்கங்களிலிருந்து வெளியேறுவது நிச்சயம் நடந்து வருகிறது.

கன்னிசாமிகளுக்கு சபரிமலை நெறிமுறைகளை சொல்லிக் கொடுப்பதற்காகவே அவர்களின் வீடுகளில் கன்னி பூஜை நடத்தப்படுகிறது. சமத்துவத்தை உணர்த்துவதற்கு தாய், தந்தை, குருசாமிக்கு பிறகு ஏற்றத்தாழ்வுகள் இன்றி அனைவருக்கும் பாத பூஜை, சமபந்தியை உணர்த்துவதற்கு அன்னதானம் (அவரவர் வசதிக்கேற்றார் போல்), 18 படி தத்துவத்தை உணர்த்துவதற்கு படிபூஜை தீபம் ஏற்றுதல் போன்ற சடங்குகள் செய்யப்படுகிறது.

யாத்திரை மேற்கொள்ளும் கன்னிசாமிகள் வீட்டில் படி தேங்காய் உடைத்தல், இருமுடி கட்டி சபரிமலை சென்று, நெய் அபிஷேகம் செய்து, தரிசனம் முடித்து வீடு திரும்பி வரும் வரை அவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், சடங்குகள் அனைத்தையும் ஐயப்பனின் முழு வரலாறையும் அடுத்தடுத்து பார்க்கும்போது, உண்மை தன்மையுடன் கூடிய விபரம் தெரிய வரும்.சாமியே சரணம் ஐயப்பா

(நாளை தரிசிப்போம்)
* சபரிமலையில் நாளை
அதிகாலை
3.00 நடை திறப்பு
3.05 நிர்மால்ய தரிசனம்
3.15-11.30 நெய்யபிஷேகம்
3.25 கணபதி ஹோமம்
காலை
7.30 உஷ பூஜை
நண்பகல்
12.30 உச்சிகால பூஜை
1.00 நடை அடைப்பு
மாலை
3.00 நடை திறப்பு
6.30 தீபாராதனை

* இரவு
7.00 புஷ்பாபிஷேகம்
10.30 இரவு பூஜை
10.50 அரிவராசனம்
11.00 நடை அடைப்பு

The post ஐயப்பன் அறிவோம் 4: கன்னிசாமியின் கடமைகள் appeared first on Dinakaran.

Related Stories: