இவிஎம்களை ஹேக் செய்யலாம் வாக்குச்சீட்டு முறைக்கு மீண்டும் திரும்ப வேண்டும்: இமாச்சல் முதல்வர் வலியுறுத்தல்

சிம்லா: தொழில்நுட்ப ரீதியாக ஹேக் செய்யப்படலாம் என்பதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்ய மீண்டும் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார். மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ கூட்டணி அமோக வெற்றியை பெற்றது எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி இமாச்சல் காங்கிரஸ் முதல்வர் சுக்விந்தர்சிங் சுகு கூறியதாவது: மின்னணு எந்திர செயல்பாட்டில் சந்தேகம் இருப்பதால் உற்பத்தியாளர்கள், அதன் உற்பத்தியை நிறுத்திவிட்டனர். எனவே பொதுமக்களின் கோரிக்கையின் பேரில் மீண்டும் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி தேர்தலை நடத்த வேண்டும். இதன் மூலம் இவிஎம் மீதான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய முடியும். எந்த தொழில்நுட்பத்தையும் ஹேக் செய்யலாம். அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் கூட இதைச் சொல்லியிருக்கிறார். இவ்வாறு தெரிவித்தார்.

The post இவிஎம்களை ஹேக் செய்யலாம் வாக்குச்சீட்டு முறைக்கு மீண்டும் திரும்ப வேண்டும்: இமாச்சல் முதல்வர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: