மக்களவையில் ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சகத்திடம் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவர் தயாநிதி மாறன் எம்.பி. எழுப்பிய கேள்விகள்:
* உள்நாட்டு விமானங்களின் கட்டணம் அதிகரித்து வருவதால் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுவரும் பாதிப்புகள் குறித்து ஒன்றிய அரசு சமீபத்தில் ஏதேனும் ஆய்வு மேற்கொண்டதா?
* உள்நாட்டுச் சுற்றுலா பயணிகளுக்கு விமானக் கட்டணம் குறைந்த விலையில் கிடைப்பதையும், வெளிப்படையான விலை நிர்ணயத்தையும் உறுதி செய்ய, விமான நிறுவனங்கள் மற்றும் ஒழுங்குமுறை ஆணையங்களுடனும் இணைந்து, ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
* சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு வரும் ஓட்டல், உணவகங்கள், சுற்றுலா அமைப்பாளர்களின் வர்த்தகம் உள்ளிட்ட உள்ளூர்ச் சுற்றுலா வணிகத்தில் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்து ஒன்றிய அரசு ஏதேனும் ஆய்வு மேற்கொண்டுள்ளதா?
* உள்நாட்டுச் சுற்றுலாவுக்கான விமானப் பயணக் கட்டணம் அதிகரிப்பதை, மானியம் அல்லது ஊக்கத்தொகை போன்ற திட்டங்கள் மூலம் சரிசெய்ய ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சகமும், விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகமும் இணைந்து செயல்படும் திட்டம் உள்ளதா?
* விமானக் கட்டணம் போன்ற பயணச் செலவுகளின் மாறுபாடுகளால், உள்நாட்டுச் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்காமல், நிலைத்த வளர்ச்சியைப் பெறுவதற்கான ஒன்றிய அரசின் நீண்டகாலத் திட்டங்கள் என்ன எனக் கேள்வி எழுப்பினார்.
The post விமானக் கட்டண உயர்வால் பாதிக்கப்படும் சுற்றுலாத்துறையை மீட்க நடவடிக்கை என்ன? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி appeared first on Dinakaran.