புதுடெல்லி: இந்தியாவில் இருந்து அசாம் மாநிலத்தை பிரித்து தனி நாடு உருவாக்க உல்பா தீவிரவாத அமைப்பு போராட்டம் நடத்தி வந்தது. இதையடுத்து உல்பா அமைப்பு கடந்த 1990ல் தடை செய்யப்பட்டது. இந்த தடை குறிப்பிட்ட கால இடைவெளியில் தற்போது வரை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. அதன் அடிப்படையில் தற்போது மேலும் 5 ஆண்டுகளுக்கு தடையை நீட்டித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்,’ உல்பா அமைப்பு மீது அசாமில் 2019 நவம்பர் 27 முதல் 2024 ஜூலை 1 வரையிலான காலகட்டத்தில் 16 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த அமைப்பு சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வைத்துள்ளது. மேலும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுவருவதால் 2024 நவம்பர் 27 முதல் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு உல்பா அமைப்பு மீதான தடை நீட்டிக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post உல்பா அமைப்புக்கு மேலும் 5 ஆண்டு தடை நீட்டிப்பு: ஒன்றிய அரசு அதிரடி appeared first on Dinakaran.