கூட்டுறவுத்துறையில் ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: கூட்டுறவுத்துறையில் ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்கும் வழிகள் குறித்து விவாதிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஐநா சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025ஐ பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். கூட்டுறவு அனைவருக்கும் செழிப்பை உருவாக்குகின்றன என்ற கருப்பொருளில் வரும் 30ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி: வீட்டு வசதித்துறை, வங்கி பிரிவுகளிலும் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. நாட்டில் சுமார் 2 லட்சம் வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.

உலகில் கூட்டுறவு நிறுவனங்களுக்கு பெரிய வாய்ப்பு உள்ளது. உலகில் ஒருமைப்பாடு, பரஸ்பர மரியாதைக்காக கூட்டுறவு நிறுவனங்களை செழிப்படைய வைக்க வேண்டும். இதற்கான கொள்கைகளை உருவாக்கி, வியூகங்களை வகுக்க வேண்டும். தற்போது கூட்டுறவு வங்கிகளில் ரூ.12 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறையை வட்ட பொருளாதாரத்துடன் இணைக்க வேண்டும். கூட்டுறவுத்துறையில் ஸ்டார்ட்அப்களை ஊக்குவிப்பதற்கான வழிகள் குறித்து விவாதிக்க வேண்டும். உலகம் மனிதனை மையமாக கொண்டு வளர்ச்சியடைய வேண்டும். இதற்காக கூட்டுறவு இயக்கத்தை மேலும் வலுப்படுத்த அரசு உறுதிப்பூண்டுள்ளது. கிராமங்களில் கூடுதலாக 12 லட்சம் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன” என்று இவ்வாறு தெரிவித்தார்.

The post கூட்டுறவுத்துறையில் ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: