அவர்களில் 12 பேர் முதல் ரவுண்டிலேயே தாக்குப்பிடிக்காமல் சுருண்டு விழுந்துள்ளனர். டைசன், 2005க்கு பின் போட்டிகளில் பங்கேற்கவில்லை. அவரை இன்று எதிர்கொள்ளும் ஜேக் பால், யூடியுப் சமூக வலைதளத்தில் புகழ் பெற்றவர். 9 போட்டிகளில் மோதியுள்ள இவர், 8ல் அபார வெற்றிகளை பெற்றவர்.
இந்நிலையில், உலக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எர்லிங்டன் நகரில் ஏடி அண்ட் டி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு, டைசன் – ஜேக் பால் ஆக்ரோசமாக மோதவுள்ளனர். இப்போட்டியில், தன் சகோதரர் லோகன் பால் சமீபத்தில் விட்ட சவால்படி, மைக் டைசனை முதல் ரவுண்டிலேயே ஜேக் பால் நாக்அவுட் முறையில் வீழ்த்துவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
* கன்னத்தில் பளார் விட்ட டைசன் என்னை தொட்ட நீ செத்த…ஜேக் பால் கர்ஜனை
எர்லிங்டன்: இன்று களமிறங்கவுள்ள மைக் டைசன், ஜேக் பால் ஆகியோரின் உடல் எடை நேற்று முறைப்படி கணக்கிடப்பட்டது. டைசன், 103.6 கிலோவும், ஜேக் பால் 102.9 கிலோவும் இருந்தனர். இந்த நிகழ்ச்சியின்போது, தன் அருகே வந்த ஜேக்கின் செய்கைகளால் எரிச்சல் அடைந்த மைக் டைசன் யாரும் எதிர்பாரா விதமாக, ஜேக்கின் கன்னத்தில் ஓங்கி பளார் என அறை விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜேக், டைசனை நோக்கி ஆவேசத்துடன் சென்றார். இதையடுத்து, அங்கிருந்த இரு தரப்பு குழுவினரும், அவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அப்போது, டைசனை நோக்கி சத்தமிட்டபடி சென்ற ஜேக் பால், ‘டைசன் சாக வேண்டும். சும்மா விடமாட்டேன்’ என கர்ஜித்தார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
The post எனக்கு 58 உனக்கு 27 நாக்அவுட் ஆவாரா மைக் டைசன்? ஜேக் பாலுடன் இன்று த்ரில் மோதல் appeared first on Dinakaran.