அதிமுக கொடியை தலைகீழாக ஏற்றி டென்ஷனாக்கிய மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை: துரைப்பாக்கம் அருகே செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பேருந்து நிலையம் அருகே சென்னை புறநகர் மாவட்ட கழகம் சார்பில், அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கழக தலைமை நிலைய செயலாளர் மற்றும் கோவை மாநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.வேலுமணி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

முன்னதாக, செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு நுழைவாயில் அருகே 100 அடி கொடிக்கம்பத்தில், எஸ்.பி.வேலுமணி அதிமுகவின் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, கட்சிக்கொடி தலைகீழாக இருப்பதை கண்டு, தொண்டர்கள் கூச்சலிட்டனர். இதனால், கொடியை இறக்கி மீண்டும் கட்சிக்கொடி சரியாக ஏற்றப்பட்டது. இச்சம்பவத்தால், சலசலப்பு ஏற்பட்டது.

The post அதிமுக கொடியை தலைகீழாக ஏற்றி டென்ஷனாக்கிய மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி appeared first on Dinakaran.

Related Stories: