திருப்பதி ஏழுமலையான் கோயில் நவம்பர் மாத உற்சவங்கள் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாதம் கடைப்பிடிக்கும் உற்சவம் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் நவம்பர் 1ம் தேதி கேதார கவுரி விரதம், 3ம் தேதி பாகினிஹஸ்த அன்னதானம், திருமலை நம்பி சாற்றுமுறை, 5ம் தேதி நாக சதுர்த்தியையொட்டி பெரிய ஷேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா நடைபெறும்.

வரும் 6ம் தேதி மணவாள மகாமுனிகள் சாற்றுமுறை, அதைத்தொடர்ந்து நவம்பர் 8ம் தேதி வருடாந்திர புஷ்பயாகத்திற்கான அங்குரார்பணம், வரும் 9ம் தேதி ஏழுமலையான் கோயிலில் புஷ்பயாகம், நடைபெறும். வரும் 10ம் தேதி பேயாழ்வார் வருட திரு நட்சத்திரம், 11ம் தேதி அன்று ஸ்ரீயாக்ஞவல்கிய ஜெயந்தி, நவம்பர் 12ம் தேதி ஏகாதசி, 13ம் தேதி அன்று கைசிக துவாதசி ஆஸ்தானம், சாற்றுமுறை விரதம் முடிவடைகிறது. 29ம் தேதி மாத சிவராத்திரி நடைபெறும்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயில் நவம்பர் மாத உற்சவங்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: