கோவை, அக்.25: கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-2024ம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அ.அழகிரி தலைமை தாங்கி மாணவ, மாணவியருக்கு பட்டயப்பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார். இதில், கோவை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குனர் கே.சிவக்குமார், கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் முதல்வர், துணைப்பதிவாளர் கே.ஆர் விஜயகணேஷ், துணைப்பதிவாளர் (பயிற்சி) கே.சுபாஷினி, கோவை நகர கூட்டுறவு வங்கி துணைப் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் காவ்யா நல்லமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.