ரெட்டிச்சாவடி, அக். 22: கடலூரில் இருந்து நேற்று காலை பழைய பிளாஸ்டிக் பைகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று விழுப்புரம் நோக்கி ெசன்று கொண்டிருந்தது. ரெட்டிச்சாவடி அடுத்த கீழ்குமாரமங்கலம் அருகே வந்தபோது, அதே பகுதியை சேர்ந்த குமரேசன் மகன் பாலகுரு(25) என்பவர் பைக்கில் சாலையை கடந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பைக் மீது மினிலாரி மோதி கவிழ்ந்தது.
மேலும் எதிரே விழுப்புரத்தில் இருந்து வந்த பைக் கவிழ்ந்த மினிலாரி மீது மோதியது. இதில், பைக்கில் வந்த பாலகுரு மற்றும் மற்றொரு பைக்கில் வந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மினிலாரி டிரைவரையும் தேடி வருகின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post ரெட்டிச்சாவடி அருகே பைக் மீது மினிலாரி மோதி 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.