புதுச்சேரி: புதுச்சேரியில் மூடப்பட்டிருந்த ரேஷன் கடைகள் 8 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளன. மேட்டுப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரேஷன் கடையை ஆளுநர், முதலமைச்சர் திறந்து வைத்தனர். ரேஷன் கடையை திறந்து வைத்து, தீபாவளிக்கான இலவச சர்க்கரை, அரிசியை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி வழங்கினர்.