கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்தது

சென்னை: மழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று சென்னை மற்றும் புறநகர் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்ககளின் வருகை குறைந்ததால் திடீரென்று அனைத்து காய்கறிகளின் விலை குறைந்தது. இதில் தக்காளி மற்றும் பீன்ஸ் அவரைக்காய் விலையும் திடீரென்று குறைந்தது. ஒரு கிலோ தக்காளி நேற்றுமுன்தினம் ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று காலை ஒரு கிலோ தக்காளி ரூ.80க்கும், பீன்ஸ் ரூ.250லிருந்து ரூ.150 க்கும் அவரைக்காய் ரூ.100 லிருந்து ரூ.80 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் அனைத்து காய்கறிகளின் விலை ரூ.15 லிருந்து ரூ.20வரை குறைந்துள்ளது.

அனைத்து காய்கறிகளின் விலை பட்டியல். ஒரு கிலோ வெங்காயம் ரூ.50 க்கும், சின்ன வெங்காயம் ரூ.70க்கும், உருளைகிழங்கு ரூ.45க்கும், கேரட் சவ்சவ் கத்திரிக்காய் ரூ.30க்கும், பீட்ருட், மூட்டை, கோஸ், பாவக்காய் சேமங்கிழங்கு ரூ.50க்கும், முள்ளங்கி புடலங்காய் காளிபிளவர் வெண்டைக்காய் ரூ.40க்கும், முருங்கைகாய் பச்சைமிளகாய் நூக்கள் ரூ.60க்கும், பட்டாணி ரூ.250க்கும் இஞ்சி ரூ.170க்கும், பூண்டு ரூ.350க்கும், பீர்க்கங்காய் ரூ.35க்கும், எலுமிச்சை பழம் ரூ.120க்கும், கோவைக்காய் கொத்தவரங்காய் ரூ.35க்கும் விற்பனை செய்யப்பட்டது.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: