அம்மா உணவகங்களில் இன்றும் இலவசமாக உணவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: வடகிழக்கு பருவமழையை ஒட்டி அம்மா உணவகங்களில் இன்றும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: சென்னையில் கடந்த 15ம் தேதி அதிக அளவில் பெய்த வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரண பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை – எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும் நேற்று உணவு வழங்கப்பட்டது. இன்றும் இலவசமாக உணவு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post அம்மா உணவகங்களில் இன்றும் இலவசமாக உணவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: