சென்னையில் 6 விமானங்கள் ரத்து

சென்னை: சென்னையில் நேற்று 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து நேற்று காலை 6.55 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 10.35 மணிக்கு சேலம் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பிற்பகல் 2.40 மணிக்கு சென்னையில் இருந்து சீரடி செல்ல வேண்டிய ஸ்பை ஜெட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 3 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதேபோல் மதுரையில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு சென்னை வர வேண்டிய, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சீரடியில் இருந்து மதியம் 1.40 மணிக்கு, சென்னை வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மாலை 6 மணிக்கு சேலத்தில் இருந்து சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 3 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாலும், புயல் நெருங்கி வந்து மிரட்டுவதாலும் மேலும் விமானங்கள் ரத்து ஆகலாம் என்று தெரிகிறது.

The post சென்னையில் 6 விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: