சென்னையில் ஒரே நாளில் 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை

சென்னை: சென்னையில் ஒரேநாளில் 16 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. 201க்கும் மேற்பட்ட ஒப்பந்த வாகனங்கள் மூலம் பால் விநியோகமும், 31 ஒப்பந்த வாகனங்கள் மூலம் அனைத்து பால்பொருட்களும் மக்களுக்கு கிடைக்க ஆவின் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. தேவைக்கேற்ப பிற மாவட்டங்களிலிருந்து தேவையான பால், பால் பவுடர் மற்றும் பால் பாக்கெட்டுகள் கொண்டு வரபட்டன. ஆவின் நிறுவனம் தினமும் 14.50 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்துவரும் நிலையில், நேற்று முன்தினம் கடும் மழை பெய்த போதிலும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்களின் தேவைக்கேற்ப, ஆவின் நிறுவனம் விநியோகத்தை அதிகரித்து, 16 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்துள்ளது.

The post சென்னையில் ஒரே நாளில் 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: