அனைத்து பேருந்துகளும் திட்டமிட்ட வழித்தடங்களில் இயக்கம்: போக்குவரத்து கழகம் தகவல்

சென்னை: கனமழை காரணமாக சில பேருந்துகளின் வழித்தடங்களில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்ட நிலையில் நேற்று அனைத்து பேருந்துகளும் அட்டவணைப்படி திட்டமிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் அதிகளவில் மழைநீர் தேங்கியதால் பேருந்துகள் இயக்கம் தாமதமானது, மேலும் பல பேருந்துகள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டது. ஓ.எம்.ஆர் சாலையில் பெருங்குடி, கந்தன்சாவடி ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் அவ்வழியாக செல்லும் பேருந்துகள் தரமணி, வேளச்சேரி, காமாட்சி மருத்துவமனை, ரேடியல் சாலை வழியாக சென்று துரைப்பாக்கம் சந்திப்பில் மீண்டும் ஓ.எம்.ஆர் சாலையில் தற்காலிகமாக இயக்கப்பட்டது.

நூறடி சாலையில், எம்எம்டிஏ காலனி திரு நகர் அருகில் மழை நீர் தேங்கியுள்ளதால் அவ்வழியே கோயம்பேடு பேருந்து நிலையம் வரை இயங்கும் பேருந்துகள் வடபழனி பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட்டது. ஆவடி, அம்பத்தூரில் இருந்து கிண்டி மார்க்கமாக வரும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையம் வரை மட்டுமே தற்காலிகமாக இயக்கப்பட்டது. தாழ்தள பேருந்துகளுக்குள் எளிதாக மழைநீர் புகுந்துவிடுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் இயக்கப்படும் தாழ்தள பேருந்துகள் நிறுத்தப்பட்டன என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்தது.

The post அனைத்து பேருந்துகளும் திட்டமிட்ட வழித்தடங்களில் இயக்கம்: போக்குவரத்து கழகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: