இந்திரா காந்தி அரசு கல்லூரியில் கழிப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்து மாணவி படுகாயம்

*மாணவர்கள் சாலை மறியல்- பரபரப்பு

புதுச்சேரி : புதுச்சேரி கதிர்காமம் இந்திரா நகரில் இந்திரா காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரியில் கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஹேமாலாதா மாணவி 2ம் ஆண்டு மைக்ரோ பயாலஜி படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை ேஹமாலாதா, கல்லூரியில் உள்ள கழிப்பறைக்கு சென்றுபோது திடீரென கழிப்பறையின் மேற் கூரை இடிந்து மாணவியின் தலை மீது விழுந்தது. அதில் ஹேமாலாதா தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்ட உள்ள சென்ற சக மாணவிகள், ேஹமாலாதாவை மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கல்லூரியின் கட்டிடங்கள் பழுதடைந்து இருப்பதாகும், வகுப்பறைகள் விக்ஷப்பூச்சிகள் இருப்பதாக குற்றம்சாட்டி 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீரென கல்லூரியில் இருந்து பேரணியாக புறப்பட்ட வழுதாவூர் சாலையில் மறியில் ஈடுபட்டனர். தகவலிறந்த சம்பவ இடத்துக்கு சென்று வடக்கு எஸ்.பி வீரவல்லபவன், மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் முத்துகுமரன், கோரிமேடு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது கல்லூரி கட்டிடத்தை ஆய்வு செய்து, பழுதடைந்த கிடக்கும் தூண்களை சரிய செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ேகாரிக்கைகள் முன்வைத்தனர். மேலும் உயர் கல்விதுறை இயக்குனர் அல்லது கல்வி துறை அமைச்சர் நேரில் வர வேண்டும் கோரிக்கை விடுத்தனர். பின்னர் கல்லூரி பொறுப்பு அதிகாரி சிவகுமார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தங்கள் வைத்து கோரிக்கைகள் அனைத்தும் முதல்வர், பொதுப்பணித்துறை, கல்வித்துறை மற்றும் உயர்கல்வி துறை அதிகாரிகள் பார்வைக்கு சென்றுள்ளனர். அடுத்து 10 நாட்களில் பழுதடைந்த உள்ள கட்டிடங்கள் அனைத்து சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்லூரிக்கு நிரந்தரம் கட்டிடம் கட்ட அரசு நிலம் கையகப்படுத்தி உள்ளது. வருகிற 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் கட்டுமான பணி தொடங்கப்படும். மாணவர்கள் ஆன்லைனில் வகுப்பு நடத்த ஏற்படு செய்யப்படும் என்றார். மேலும் கட்டிடம் சீரமைக்கவில்லை என்றால் புதுவை முழுவதும் அனைத்து கல்லூரி மாணவர்கள் வகுப்புகள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்து, போராட்டத்தை கைவிட்ட கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

The post இந்திரா காந்தி அரசு கல்லூரியில் கழிப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்து மாணவி படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: