சென்னையில் இன்றும் நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்பு.. காற்றழுத்த மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை : பிரதீப் ஜான்

சென்னை : சென்னையில் இடைவிடாமல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னையில் மேகக் கூட்டங்கள் கொஞ்சம் கூட பலவீனமடைந்தாக தெரியவில்லை, மாறாக மேக் கூட்டங்கள் மேலும் மேலும் அடர்த்தி ஆகி கொண்டு இருக்கின்றன. இது யாரையும் பயமுறுத்துவதற்கான பதிவு அல்ல. இடைவிடாது மழை பெய்யும் என்றே தோன்றுகிறது. மேகங்கள் மேலும் மேலும் அடர்த்தியாவதால் குறைந்தது 3 மணி நேரத்திற்கு அதிகனமழை பெய்யும்.. நாளையும் மழையின் தீவிரம் அதிகரிக்கும்.

சென்னையில் நள்ளிரவில் இருந்து சில இடங்களில் 200 மி.மீ மழை பெய்துள்ளது. அண்ணா நகர் போன்ற பகுதிகளில் காலை 8.30 மணி வரை 9 செ.மீ. மழையும், அதன் பிறகும் 9 செ.மீ மழையும் பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 4 மணி நேரத்தில் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டு கடற்கரையை இன்னும் நெருங்கவில்லை. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் தீவிரமடையும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு உள்ளது. ஆனால் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாக அதிக வாய்ப்பு இல்லை,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் இன்றும் நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்பு.. காற்றழுத்த மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை : பிரதீப் ஜான் appeared first on Dinakaran.

Related Stories: