மாட்டு தொழுவத்தில் தூங்கினால் புற்றுநோய் குணமாகும்: உபி அமைச்சர் பேச்சு

பிலிபித்: உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ அமைச்சரவையில் கரும்பு வளர்ச்சி மற்றும் சர்க்கரை ஆலைகள் துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் சஞ்சய் சிங் கங்வார். இவர் நேற்று தன் பிலிபித் தொகுதியில் உள்ள பகாடியா நவுகாவானில் பசுக்கள் காப்பகத்தை திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சஞ்சங் சிங் கங்வார், “புற்று நோயாளிகள் தினமும் மாட்டு தொழுவத்தை நன்றாக சுத்தம் செய்து விட்டு, அங்கே மாடுகளின் அருகே படுத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்தால் புற்றுநோய் குணமாகி விடும். இதேபோல் ரத்த அழுத்த நோயாளிகள் தினமும் காலை, மாலை வேளைகளில் ஒரு பசுவை அதன் முதுகில் செல்லமாக தட்டி கொடுக்க வேண்டும். அப்போது ரத்த அழுத்த நோயாளிகள் ஒருநாளைக்கு 20 மில்லி கிராம் எடுத்து கொள்ளும் மருந்தின் அளவு 10 மில்லி கிராமாக குறையும்” என தெரிவித்தார். சர்ச்சைக்குரிய அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

The post மாட்டு தொழுவத்தில் தூங்கினால் புற்றுநோய் குணமாகும்: உபி அமைச்சர் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: