கொளப்பாட்டில் மக்கள் தொடர்பு முகாம் 100 பயனாளிகளுக்கு R5.69 லட்சத்தில் நலதிட்டஉதவி

* நாகை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்

* 3 ஊராட்சி பொதுமக்கள் பங்கேற்பு

கீழ்வேளூர் : கொளப்பாடு ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் நாகை மாவட்ட கலெக்டர் ஆகாஷ், 100 பயனாளிகளுக்கு ரூ.5.69 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுகா கொளப்பாடு அரசு உயர்நிலை பள்ளியில் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்குட்ட தலைஞாயிறு ஒன்றியம் கொளப்பாடு ஊராட்சி, கீழ்வேளூர் ஒன்றியம் வலிவலம் ஊராட்சி, கொடியளத்தூர் ஊராட்சி ஆகிய ஊராட்சிகளுக்கான மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி முன்னிலை வகித்தார். கொளப்பாடு ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார் வரவேற்றார். முகாமிற்கு நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை வகித்து வருவாய் துறை சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.2,60,000மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டா, 15 பயனாளிகளுக்கு பட்டா நகல், வட்ட வழங்கல் துறை சார்பில் 38 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு ரூ.2,19,000, மதிப்பீட்டில் இறப்பு உதவிதொகை மற்றும் திருமண உதவி தொகை, தோட்டக்கலைத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ.9,919, மதிப்பீட்டில் மா, தென்னை, வெண்டை, திசு வாழைக்கன்றுகளையும், வேளாண்மைத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ.5,415- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிக்கு ரூ.28,000- மதிப்பீட்டில் செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோருக்கான திறன் பேசியினையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.35,000 மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரங்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.11,766 மதிப்பீட்டில் தையல் இயந்திரம் மற்றும் தேய்ப்பு பெட்டி என மொத்தம் 100 பயனாளிகளுக்கு ரூ.5.69 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் கலெக்டர் ஆகாஷ் பேசியதாவது:

தமிழ்நாடு அரசு அறிவிக்கும் எண்ணற்ற திட்டங்களை சரியான நபர்களுக்கு சரியான நேரத்தில் சென்றடைய வேண்டும். அப்படி சென்றடைந்தால் அத்திட்டம் வெற்றிபெற்றது என அர்த்தம். மேலும், உண்மையான கஷ்டத்தில் இருக்ககூடிய மக்களுக்கு உதவும் வகையில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்படும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளான மகன் மற்றும் மகள் போதை பொருட்கள், தொடுதிரை செல்போன், இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவது போன்ற தவறான விஷயங்களில் ஈடுபடுவதை அவ்வப்போது கண்காணித்து, அறிவுரைகளை அளிக்க வேண்டும் என்று கலெக்டர் ஆகாஷ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் .திருமால், வலிவலம் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், , தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கார்த்திகேயன், திருக்குவளை வட்டாட்சியர் .சுதர்சன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் தலைஞாயிறு ராஜ், சிங்காரவேல் கீழ்வேளூர் ராஜகோபால், பாலமுருகன்மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உட்பட பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக பெறப்படும் கோரிக்கை மனு குறித்து கலெக்டர் விளக்கம்

பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு சிரமமின்றி தீர்வு காண வேண்டும் என்பதற்காக அரசு சார்பில் இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம்கள் ஒவ்வொரு கிராமப்புற பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும்.

மக்கள் தொடர்பு முகாமை பொறுத்தவரை, முகாம் நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டாட்சியர் மூலம் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, அந்த மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, மக்கள் தொடர்பு முகாமில் அதற்கான தீர்வுகள் வழங்கப்படும். மேலும், மனுக்களுடன் ஏதேனும் ஆவணங்கள் இணைக்கப்படாமல் இருந்தால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு தெரியப்படுத்தி, அந்த ஆவணங்களை பெற்று, இணைத்து அந்த மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொள்ளப்படும். இதுதான் மக்கள்தொடர்பு முகாமின் நோக்கம் ஆகும்.

பல்வேறு துறை சார்பில் கண்காட்சி

முன்னதாக முகாமில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை நகை கலெக்டர் ஆகாஷ் பார்வையிட்டு, வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டார்.

The post கொளப்பாட்டில் மக்கள் தொடர்பு முகாம் 100 பயனாளிகளுக்கு R5.69 லட்சத்தில் நலதிட்டஉதவி appeared first on Dinakaran.

Related Stories: