மலேசியாவில் இந்திய குடியுரிமை உள்ள தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் விழா

மலேசியா வாழ் தமிழர்கள் சங்கம் (இந்திய குடியுரிமை) சங்கத்தின்சார்பாக மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 19.01.2019 அன்று பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழரின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், மகளிரின் நடனம், கபடி, உரியடி, சிலம்பாட்டம், கயிறுயிழுத்தல் மற்றும்  மழலையரின் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

Advertising
Advertising

இவ்விழாவானது வளரும் தலைமுறையினர்க்கு பொங்கல் விழாவின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது. இவ்விழாவினை திருமதி. கோமதி, திருமதி. சவிதா, திருமதி. பூர்ணிமா, டாக்டர். சக்திவேல், டாக்டர். பாலாஜி, திரு. பாலாஜி நாராயணன் மற்றும் திரு. விஜய் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாக குழுவினர் ஒருங்கிணைத்திருந்தனர்.

Related Stories: