தீபாவளியையோட்டி துபாயில் 16 நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள்

துபாயில் இந்திய துணை தூதரகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து தீபாவளி கொண்டாட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய துணை தூதர் விபுல் கூறுகையில்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் 33 லட்சம் இந்தியர்கள் உள்ளனர்.இங்குள்ள இந்திய மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாகவும்,சகிப்புத்ன்மையை வலியுறுத்தும் விதமாகவும் இரண்டு அரசுத்துறைகள் இணைந்து தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertising
Advertising

இதில் துபாயில் பெஸ்டிவெல் சிட்டியில் நாளை முதல் (வெள்ளிக்கிழமை) அடுத்த மாதம் நவம் 2ந்தேதி வரை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என்றார்.

இச்சந்திப்பில்  துபாய் சுற்றுலாத்துறையின் சில்லரை வர்த்தக பிரிவின் இயக்குநர் முஹம்மது பெர்ராஸ் அரயாகத் மற்றும் அல் புத்திம் வணிக வளாகங்களின் இயக்குநர் ஸ்டீவன் கிளவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Related Stories: