லண்டன் நகரில் ஹாரோ தமிழ் சமூக சங்கம் சார்பில் பொங்கல் திருவிழா : தமிழர்கள் உற்சாகம்

லண்டன் : இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள ஹாரோ பகுதியில் தமிழர்கள் பொங்கல் திருவிழாவை வெகுவிமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.ஹாரோ தமிழ் சமூக சங்கம் ஏற்பாடு செய்த இந்த திருவிழா, ஹாரோ கவுன்சில் சேம்பரில் நடைபெற்றது.

Advertising
Advertising

ஹாரோ தமிழர்கள் என்ற அமைப்பினர் 10வது முறையாக மிகச்சிறப்பாக நடத்திய இத்திருவிழாவில், 300-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டனர். தமிழ் குழந்தைகளும், பெண்களும், பரதம் மற்றும் கிராமிய நடனங்களான ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். மேலும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் ஹரோ மேயர், கவுன்சிலர் நிதின் பரேக், ஹாரோ கவுன்சில் தலைவர் கிரஹாம் ஹென்சன் மற்றும் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

Related Stories: