கனடிய தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் நடத்திய சிறப்பு பொங்கல் விழா

பொங்கல் தினத்தினை முன்னிட்டு கனடாவில் வருடா வருடம் தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் “டுறம்” சிறப்பு நிகழ்வுகளை பிக்கறிங் ரவுன் சென்ரரில் நடத்தி வருகிறது.வாசா  நாதன் தலைமையில் இப் பொங்கல் தின சிறப்பு விழா மிகவும் கோலாகலமாக ஜனவரி 18ம் தேதி நடைபெற்றது. 11வருடங்களாக நடைபெற்று வரும் இந்நிகழ்வானது பிக்கறிங் ரவுன் சென்ரரில் பொது மக்கள் பார்வையில் 7வது வருடமாக இவ் வருடம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வினை மேலும் சிறப்பிற்கும் விதமாக மேடைப் பேச்சுக்கள், கலை நிகழ்ச்சிகள், தமிழ் கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் இனிய பாடல்கள் என்பனவும் இடம் பெற்றன. மேலும் சந்தியாராகம் கோல்டன் சூப்பர் சிங்கர் பாடல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், பல இனிமையான பாடல்களை அன்றைய தினம் பாடி மக்களை கவர்ந்தனர்.இந் நிகழ்வானது காலை 11 மணியளவில் ஆரம்பித்து மாலை நான்கு மணியளவில் இனிதே நிறைவு பெற்றன.

Related Stories: