துபாயில் வரவேற்பை பெறும் ரஜினி உணவகம்..ரசிகர்கள் உற்சாகம்

துபாய் நகரின் பர்துபாய் பகுதி ரஜினி பெயரில் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. பெங்களூர் தமிழரான ஜெயராமன் மற்றும் அவரது மனைவி சவீதா ஆகியோர் இணைந்து இந்த உணவகத்தை நிர்வாகித்து வருகின்றனர்.

Advertising
Advertising

ரஜினி நடித்த பல திரைப்படங்களின் புகைப்படங்கள்,ரஜினி பேசிய வசனங்கள் என கடை முழுவதும் புகைப்படங்களாக வைக்கப்பட்டுள்ளது.கடையின் முகப்பிலேயே ரஜினி படம் இடம்பெற்றுள்ளது

  ஏராளமான ரஜினி ரசிகர்கள் இக்கடைக்கு ஆர்வத்துடன் வருகை தருகின்றனர்.இக்கடைக்கு வருகை தந்த ரஜினி ரசிகரான கவுசர் பேக் என்பவர் கூறுகையில்…

ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.அவரின் படங்கள் அவரின் வசனங்களை ரசித்தவாறு உணவு சாப்பிடுவது என்பது புதுமையான அனுபவம் என்றார்.

Related Stories: