சிங்கப்பூரில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு பிரம்மாண்ட முழு உருவ வெள்ளி கவசம் சாற்றும் விழா

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ சீதாலட்சுமி சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு பிரம்மாண்ட முழு உருவ வெள்ளி கவசம் சாற்றும் விழா ஆகஸ்டு 12-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. ஆலயத் தலைமை அர்ச்சகர் வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார் ஏற்பாட்டில் பக்தப் பெருமக்களால் சமர்ப்பிக்கப்பட்ட இக்கவச விழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கவச பாகங்களைச் சிரமேற் கொண்டு ஆலயம் வலம் வந்து பயபக்தியோடு சமர்ப்பித்தனர்.விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்குச் சாற்றி மகா தீபாராதனை நடைபெற்ற போது பக்தர்கள் மெய் மறந்து “ ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு ஜே “ என முழக்கமிட்டனர். ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி வெள்ளிக் கவசம் அணிந்து காட்சியளித்து அருள்பாலித்தது மெய் சிலிர்க்க வைத்தது. கலந்து கொண்ட பக்தப் பெருமக்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: