ஜெர்மனியில் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் தேர்த் திருவிழா

ஹம் : ஜெர்மனியின் ஹம் நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் தேர்த் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆறுமுக பாஸ்கர ஸ்வாமிகளின் அபிஷேகம் மற்றும் பூஜைகளுடன் விழா துவங்கியது. தேர் பவனியின் போது பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்பக்காவடி, கற்பூரச்சட்டி, பால்குடங்கள் ஏந்தி வந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். மழை பெய்த போதும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் திருவிழாவில் வேற்று நாட்டினரும், வேற்று மதத்தினரும் பெருமளவில் கலந்து கொண்டனர். இந்திய தூதர் பிரதீபா பாக்கர், உலக சமாதான நிறுவன பிரதிநிதி பாக் கோரியா, துணை பிரதிநிதி அயன்ஓட், மியான்மர் நாட்டு புத்த மத துறவி சூசலசுவாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: