காந்தி பிறந்தநாளையொட்டி துபாயில் சிறப்பு நிகழ்ச்சிகள்... அமைதி மற்றும் சகிப்புதன்மைக்கான‌ நடைபயணம்

துபாய். அக் 2 மஹாத்மா காந்தி பிறந்த தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 150வது ஆண்டு பிறந்த தினத்தையோட்டி துபாயில் இந்திய துணை தூதரகம் சார்பில் சபீல் பூங்கா பகுதியில் அமைதி மற்றும் சகிப்புதன்மையை முன்னிலைபடுத்தி 4 கிலோ மீட்டர் நடைபயணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அதிகாலையிலிருந்து சபீல் பூங்கா பகுதியில் ஏராளமானோர் குவிய தொடங்கினர். இந்திய துணை தூதரகத்தின் துணை தூதர் விபுல் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் நடைபயணத்தில் பங்கேற்றனர். மேலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

Advertising
Advertising

Related Stories: