பெரம்பலூர், செப்.24: வருகிற 27ம்தேதி நடை பெறவுள்ள தொழிலாளர் நலத்துறையின் விழிப் புணர்வுக் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட வணிகர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் சண்முகநாதன் தெரிவித்துள்ளார். இதுதொடார்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : நமது கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை தமிழ்ப் படுத்துல் தொடர்பாகவும், நிறுவனங்களை கணினியில் பதிவேற்றம் செய்வது தொடர்பாகவும், வணிகர்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள அரிய வாய்ப்பாக, வருகிற 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 3.30 மணியளவில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில்,
மாவட்ட விளையாட்டு மைதானத் தின் கிழக்குப்பகுதியில் உள்ள மாவட்டதொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலா க்கம்) மூர்த்தி தலைமையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின்மாவட்டத் தலைவர் ஏ.கே. வி.எஸ். சண்முகநாதன் முன்னிலையில் நடைபெற உள்ள இந்த விழிப்புணர்வு க்கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகர்களும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு தெரிவித் துள்ளார்.
The post பெரம்பலூரில் 27ம் தேதி தொழிலாளர் நலத்துறை விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.