புழல்: புழலில் வியாபாரிகள் சங்கங்கள் சார்பில் வெள்ளையன் உருவ படத்திறப்பு, இரங்கல் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் உருவ படத்திறப்புமும், இரங்கல் கூட்டமும் புழல் வட்டார வியாபாரிகள் சங்கத்தின் சார்பில், சங்க திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. புழல் வட்டார வியாபாரிகள் சங்க தலைவர் செல்லதுரை தலைமை தாங்கினார்.
சங்க செயலாளர் ஜெயின் அலாவுதீன், சங்க பொருளாளர் அம்பிகா சேகர், வடகரை திராவிட டில்லி, பகுதி சங்க நிர்வாகிகள் வாசுதேவன், எம்ஜிஆர் நகர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சௌந்தர்ராஜன் கலந்துகொண்டு, மறைந்த மாநில தலைவர் வெள்ளையன் உருவப்படத்தினை திறந்து வைத்தார். கூட்டத்தில் வியாபாரிகள் சங்க கொடியில் வெள்ளையன் படத்தை அமைத்திடவும், வெள்ளையன் வசித்த பெரம்பூர் பகுதியில் உள்ள நெல்வாயல் சாலைக்கு வெள்ளையன் பெயர் வைக்க சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்வில் புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், வியாபாரிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் சண்முகம், சேக் அகமது, தனசேகரன், பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச்செயலாளர் பெரியார் அன்பன், வடசென்னை மேற்கு மாவட்ட மதிமுக செயலாளர் புழல் டி.சி.ராஜேந்திரன், ஜெயசீலன், புழல் 24வது வட்ட திமுக செயலாளர் சுந்தரேசன், ஆம்புலன்ஸ் பாலாஜி, பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், புழல் மற்றும் சுற்றுவட்டார வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post புழல் வியாபாரிகள் சங்கம் சார்பில் வெள்ளையன் படத்திறப்பு, இரங்கல் கூட்டம் appeared first on Dinakaran.