ஜெகன் மோகன் பாவம் செஞ்சிட்டாரு ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்டு பவன்கல்யாண் 11 நாள் பரிகார விரதம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாத நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்பட விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பாவம் செய்துவிட்டதாகவும், ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்டபதாகவும் நேற்று முதல் 11 நாட்கள் பரிகார விரதம் இருப்பதாகவும் துணைமுதல்வர் பவன் கல்யாண் அறிவித்திருந்தார். அதன்படி, குண்டூரில் உள்ள தசாவதார வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் நேற்று சிறப்பு பூஜைகள் செய்து துணை முதல்வர் பவன்கல்யாண் தனது விரதத்தை தொடங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் ஏழுமலையான் கோயிலில் நடந்துவந்த பூஜை நடைமுறைகளை மாற்றினர். பிரசாதத்தில் கலப்படம் இருக்கிறது, தரம் இல்லை என முன்பே நாங்கள் கூறினோம். இதை கண்டுகொள்ளவில்லை. பிற வழிபாட்டு தலங்களில் இதுபோன்று நடந்திருந்தால் உலக அளவில் விவாதிக்கும் பொருளாக இருந்திருக்கும். ஆனால் இந்துக்கள் என்றால் அமைதியாக இருக்க வேண்டுமா? எந்த மதத்திற்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அதன் உணர்வுகளை புண்படுத்தினால் வேடிக்கை பார்க்க முடியாது.

ஜெகன்மோகன் பிற மத வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடந்தால் கேள்வி கேட்பார். ஆனால், திருமலையில் தவறு செய்தவர்களுக்கு துணைபோகிறார். என்னை பொறுத்தவரை எந்த மதமாக இருந்தாலும் அந்த மத கலாச்சாரத்திற்கு எதிராக செயல்பட்டால் அதற்கு எதிராக போராடுவேன். லட்டு பிரசாத கலப்பட விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த முதல்வர் பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

* ஜெகன் மோகன் வீடு முற்றுகை
விஜயவாடா அருகே உள்ள தாடேபள்ளியில் உள்ள ஜெகன்மோகன் வீட்டை பா.ஜ.,வின் இளைஞர் பிரிவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. அப்போது, திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலந்ததைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்தனர்.

The post ஜெகன் மோகன் பாவம் செஞ்சிட்டாரு ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்டு பவன்கல்யாண் 11 நாள் பரிகார விரதம் appeared first on Dinakaran.

Related Stories: