பிரதமர் மோடியை தாக்கி ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் 5 கேள்வி கேட்ட கெஜ்ரிவால்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு முதல் முறையாக, ஜந்தர்மந்தரில் நேற்று நடந்த ‘மக்கள் நீதிமன்றம்’ எனும் பொதுக்கூட்டத்தில் கெஜ்ரிவால் பங்கேற்று, பாஜவை விட அதன் தாய் அமைப்பே மேலானது என்ற கோணத்தில் புதிய அரசியல் வியூகத்தை முன்னெடுத்துள்ளார். இதனால், பிரதமர் மோடியை தாக்கி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திடம் 5 கேள்விகளை கெஜ்ரிவால் கேட்டுள்ளார்.

கெஜ்ரிவால் பேசுகையில், ‘‘மகன் தற்போது தன் தாயிடமே தனது நடத்தையை காட்டும் அளவுக்கு பெரியவனாகி விட்டானா? ஊழல்வாதிகள் என சில தலைவர்களை விமர்சித்துவிட்டு, பின்னர் அவர்களையே தன் கட்சியில் சேர்த்துக் கொள்ளும் பாஜவின் அரசியலை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? ஆர்எஸ்எஸ் இனி பாஜவுக்கு தேவையில்லை என அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறிய போது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்? பாஜவின் தற்போதைய அரசியலில் ஆர்எஸ்எஸ் தலைவர் திருப்தி அடைகிறாரா?

ஒவ்வொரு தலைவரும் 75 வயதை அடையும் போது ஓய்வு பெறுவார்கள் என்று ஆர்எஸ்எஸ், பாஜ விதியை உருவாக்கியது. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்ராஜ் மிஸ்ரா போன்ற தலைவர்கள் இந்த விதிப்படி ஓய்வு பெற்றனர். ஆனால், அத்வானியின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்த விதி பிரதமர் மோடிக்கு பொருந்தாது என அமித்ஷா கூறுகிறார். இதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா?’’ என கேள்வி கேட்டுள்ளார்.

The post பிரதமர் மோடியை தாக்கி ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் 5 கேள்வி கேட்ட கெஜ்ரிவால் appeared first on Dinakaran.

Related Stories: