முஸ்லிம்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என்று விமர்சனம் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வருத்தம்

பெங்களூரு: பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியை பாகிஸ்தான் என்று கூறிய தனது பேச்சுக்கு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சர் ஸ்ரீஷானந்தா வருத்தம் தெரிவித்துள்ளார். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சர் ஸ்ரீஷானந்தா, நில உரிமையாளர் – குத்தகைதாரர் தொடர்பான ஒரு வழக்கு விசாரணையின்போது, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பெங்களூருவின் கோரிபாளையா பகுதியை பாகிஸ்தான் என்று கூறியிருந்தார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே நீதிபதி ஸ்ரீஷானந்தா ஒரு பெண் வழக்கறிஞர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோவும் வைரலானது. இதையடுத்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து விசாரித்துவருகிறது.

இதுதொடர்பாக பேசிய நீதிபதி வேதவியாசச்சர் ஸ்ரீஷானந்தா, நீதித்துறை நடவடிக்கைகளின்போது நடந்த சில விஷயங்கள் சமூக வலைதளங்களில் சூழலுக்கு அப்பாற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அது உள்நோக்கத்துடனோ அல்லது யாருடைய மனதையோ அல்லது எந்த குறிப்பிட்ட சமூகத்தையோ புண்படுத்தும் நோக்கத்திலோ தெரிவிக்கப்ப டவில்லை. ஒருவேளை அந்த கருத்தில் யாருடைய மனதும் புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

The post முஸ்லிம்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என்று விமர்சனம் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வருத்தம் appeared first on Dinakaran.

Related Stories: