₹3.75 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை

திருச்செங்கோடு, செப்.21: திருச்செங்கோடு கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ₹3.75 லட்சத்திற்கு கொப்பரை விற்பனையானது. திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் திருச்செங்கோடு தலைமையகத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. திருச்செங்கோடு மற்றும் சுற்றுப்புற பகுதகளிலிருந்து 80 மூட்டை கொப்பரையை விற்பனைக்காக கொண்டு வந்து குவித்தனர். முதல் தரம் கிலோ ₹93.75 முதல் ₹115.35 வரையிலும், இரண்டாம் தரம் ₹82.75 முதல் ₹88.75 வரையிலும் விற்பனையானது. ஆக மொத்தம் ₹3.75 லட்சம் வர்த்தகம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ₹3.75 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: