காவல் நிலையத்தில் 354 வழக்குகள் பதிவு

சேந்தமங்கலம், ஜன.1: சேந்தமங்கலம், கொல்லிமலை காவல் நிலையத்தில் கடந்தாண்டு 354 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சேந்தமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்தாண்டு அடிதடி, வாகன விபத்து, பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை, பண மோசடி, குடும்பத்தகராறு, கொலை வழக்கு என பல்வேறு பிரிவுகளில் கீழ் 270 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்குகள் மீது போலீசார் மேல் நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை கைது செய்தனர்.

இதே போல், கொல்லிமலை வாழவந்தி நாடு காவல் நிலையத்தில், கடந்தாண்டு 84 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, அதற்காக அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இரு காவல் நிலையத்திலும் மொத்த 354 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Related Stories: