நீச்சல் போட்டியில் சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு

திருச்செங்கோடு, டிச.30: நீச்சல் போட்டியில் சாதனை படைத்த மாணவருக்கு ஈஸ்வரன் எம்எல்ஏ பாராட்டு தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலம் மால்வானில் 3வது தேசிய திறந்த நீர் ஸ்விம்மிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், திருச்செங்கோடு நகராட்சி 10வது வார்டு கொமதேக செயலாளரான சுரேஷ்குமாரின் மகனும், விரிக்ஷா குளோபல் பள்ளி மாணவருமான லேனா பிரணேஷ் 2வது பரிசை வென்று சாதனை படைத்தார். மேலும், அதே போட்டியில் இப்பள்ளி நீச்சல் பயிற்சியாளர் வீரமணி மனோகரன் பங்கேற்று பயிற்சியாளர்களுக்கான பிரிவில் முதல் பரிசை பெற்றார். நீச்சல் போட்டியில் சிறப்பிடம் பெற்ற இருவரும் கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Related Stories: