ஆர்ப்பாட்டம்

நாமகிரிப்பேட்டை, டிச. 27: புரட்சிகர தொழிலாளர்கள் கட்சியின் மாநில பொது சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் மாணிக்கம் தலைமை வகித்தார். நிறுவனத் தலைவர் வெங்கடாசலம், மாநில ஆலோசகர் நல்வினை விஸ்வராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியத்தில் பொங்கல் சிறப்பு தொகை வழங்கவேண்டும். பென்ஷன் உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் விபத்து காப்பீட்டு தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். வெள்ளக்கல்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை, அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: