ராசிபுரம், டிச.24: ராசிபுரம் வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரியில், இளைஞர் செஞ்சிலுவை மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் சார்பில், ரத்த தான முகாம் நடந்தது. முகாமினை கல்லூரி முதல்வர் விஜய்குமார் மற்றும் சமுதாய செயல்பாட்டுத் தலைவர் ராமமூர்த்தி, இளைஞர் செஞ்சிலுவை மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இம்முகாமில், சேலம் மாருதி ரத்த வங்கிக்காக, கல்லூரி மாணவர்கள் சுமார் 56 யூனிட் ரத்தத்தை தானமாக வழங்கினர். அவர்களுக்கு பழச்சாறு வழங்கப்பட்டது. ரத்த தானம் செய்த மாணவர்களுக்கு ரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் யுவராஜ் மற்றும் மாருதி அறக்கட்டளை மேலாளர் வெங்கடாசலம் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.
ரத்த தான முகாம்
- இராசிபுரம்
- முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- ராசிபுரம் வனேத்ரா குழுமம்
- இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம்
- செஞ்சிலுவை சங்கம்
- கல்லூரி அதிபர்
- விஜய் குமார்
- மற்றும் சமூக செயல்பாடுகள்
- ஜனாதிபதி
- ராமமூர்த்தி
- இளைஞர் செஞ்சிலுவை சங்கம்...
