நாமக்கல் மாவட்டத்தில் 34 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும்

நாமக்கல், ஜன.1: நாமக்கல் மாவட்டத்தில் 34 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படுகிறது என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர். இதற்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி பேசியதாவது:

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் விதைகள் மற்றும் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப, இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. உழவர் நல சேவை மையங்கள் அமைக்க, தமிழக முதலமைச்சர் அரசாணை வழங்கியுள்ளார்.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் 34 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் இயல்பு மழை அளவு 716.54 மி.மீ., ஆகும். தற்போது வரை 728.03 மி.மீ., மழை பெறப்பட்டு உள்ளது. இயல்பை விட 11.49 மி.மீ., மழை கூடுதலாக பெறப்பட்டு உள்ளது. இவ்வாறு கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்தார்.

 

Related Stories: