சாலையில் முறிந்து விழுந்த மரம்

சேந்தமங்கலம், டிச.31: புதுச்சத்திரம் அருகே, புதன்சந்தை பஸ் ஸ்டாப் பகுதியில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளது. இதன் அருகில் ஏராளமான டீக்கடைகள், மளிகை கடைகள், பேக்கரி, பழக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. சாலையோரத்தில் வாதநாராயண மரம் இருந்தது. இதன் அருகில் பெண்கள் பழக்கடை வைத்துள்ளனர். நேற்று மாலை திடீரென வாதநாராயண மரம் இரண்டாக முறிந்து சாலையில் விழுந்தது. அதனைக்கண்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்களும், கடை உரிமையாளர்களும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். நல்ல வேளையாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. சாலையில் மரம் விழுந்ததால் அந்த வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில், சேந்தமங்கலம் நெடுஞ்சாலை துறையினர் விரைந்து வந்து, மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதையடுத்து, போக்குவரத்து சீரடைந்தது.

Related Stories: