மொரிஷியஸில் உள்ள ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா

மொரிஷியஸ்: மொரிஷியஸில் டெர்ரே ரூக் என்ற ஊரில் உள்ள ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோயிலின் கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடந்தேறியது. இக்கோயிலில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ கிருஷ்ணர், மற்றும் காளி சன்னதிகள் அனைத்திற்கும் கும்பாபிஷேகங்கள் நடந்தன. காலை 8 மணி முதல் மந்திர கோஷங்கள் முழங்க, ஆகம விதிப்படி ஹோமங்களும், கலச பூஜைகளும் நடைபெற்றன. கும்பாபிஷேகத்திற்கு பின், வீர மா காளி அம்மனுக்கு மஹா ஆர்த்தியும் நடைபெற்றது. இந்த விழாவிற்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும், மதிய விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Advertising
Advertising

Related Stories: