சென்னை மாணவிக்கு அமெரிக்கா தியேல் அறக்கட்டளையின் ஊக்க விருது

சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் உள்ள தியேல் அறக்கட்டளையின் 2018ம் ஆண்டிற்கான தியேல் பெல்லோஷிப், சென்னையைச் சேர்ந்த 21 வயதான மாணவி அபர்ணா கிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது. உலகம் முழுவதிலுமிருந்த தேர்வு செய்யப்பட்ட 20 பேர் பட்டியலில் இவரும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கணிதத்தில் ஆர்வம் கொண்ட இவர் பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மேலும் விளையாட்டுத் துறையிலும் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளார். ரகசிய குறியீடுகள் மற்றும் நாணயங்கள் தொடர்பான பிளாக்செயின் கிளப்பில் முன்னோடியாக திகழ்ந்த இவர், இந்த தொழில்நுட்பத்தை மாணவர்கள் மற்றும் நிறுவனங்களிடம் பிரபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். மேலும் ரகசிய குறியீடு மற்றும் பொருளாதார ஆராய்ச்சிக்கான முதல் சோதனை நிலையத்தையும் இவர் ஏற்படுத்தினார். ஓமன், மெக்சிகோ, இந்தியா, ஹாங்காங் மற்றும் அமெரிக்காவில் பிளாக் செயின் பயிற்சி அளித்துள்ளார். தற்போது தியேல் அறக்கட்டளை ஊக்குவிருதைப் பெறுவதன் மூலம், உலகின் தலைசிறந்த ரகசிய குறியீடு நிபுணர்கள் வரிசையில் இடம் பெறுகிறார். இளம் வயதிலேயே நிறுவனங்களைத் தொடங்கவும், சிறந்த பெரிய வழிமுறைகளைக் கண்டறியும் திறமையுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த பெல்லோஷிப் வழங்கப்படுகிறது.

Related Stories: