மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையை இழந்தது ஏன்?: ஒன்றிய அமைச்சர் புது விளக்கம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையை இழந்தது ஏன்? என்பதற்கு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி புது விளக்கம் கொடுத்துள்ளார். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 240 இடங்களை மட்டுமே கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பலத்தை பாஜக பெறவில்ைல. அதனால் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே 2019ல் நடந்த தேர்தலில் பாஜக 303 இடங்களை கைப்பற்றியது. பாஜகவின் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் பல கூறப்பட்டாலும், ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘நடந்து முடிந்த மக்களவை தேர்தலானது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, அதனை நம்பவைக்கும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஆரம்பத்தில் இருந்தே எதிர்க்கட்சிகள் வாக்காளர்களை குழப்பும் வகையில் பிரசார யுக்தியை கையாண்டன. அரசியல் சாசனத்துக்கு பாஜக எதிரானது என்றும், அரசியல் சட்டத்தை மாற்றுவார்கள் என்றும் பிரசாரம் செய்யப்பட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் சலுகைகள் இனிமேல் தொடராது என்ற அச்சத்தை ஏற்படுத்தினர். விவசாயிகளின் நலனுக்காக நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் அவர்களுக்கு எதிரானவை என்று கூறப்பட்டது. இருந்தாலும் வரவிருக்கும் நான்கு மாநில தேர்தல்களிலும் நாங்கள் பெரும்பான்மையை பெறுவோம். காங்கிரசின் 60 ஆண்டுகளையும், பாஜகவின் 15 ஆண்டுகால ஆட்சியையும் ஒப்பிட்டு பார்த்தால் விடை கிடைக்கும்’ என்றார்.

 

The post மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையை இழந்தது ஏன்?: ஒன்றிய அமைச்சர் புது விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: