திருநங்கை நல்வாழ்வு வாரியம் விவகாரத்தில் 3 வாரத்தில் பதிலளிக்காவிட்டால் ரூ25ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு


புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,‘‘நாடு முழுவதும் உள்ள திருநங்கைகளின் பிரச்னையை தீர்க்கும் விதமாக அவர்களுக்கு என நல்வாழ்வு வாரியத்தை அனைத்து மாநிலத்திலும் அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய் மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,‘‘திருநங்கைகளுக்கு நல்வாழ்வு வாரியம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யாமல் இருக்கும் மாநிலங்கள் அனைத்தும் அடுத்த மூன்று வாரத்தில் தங்களது நிலைப்பாட்டை பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் ஒரு மாநிலத்திற்கு ரூ.25ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்த நீதிபதிகள் இதுதொடர்பான வழக்கை ஆறு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

The post திருநங்கை நல்வாழ்வு வாரியம் விவகாரத்தில் 3 வாரத்தில் பதிலளிக்காவிட்டால் ரூ25ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: